இந்திய  பெண்களை மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பும் போலி முகவர் நிலையம் சுற்றிவளைப்பு

இந்திய பெண்களை மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பும் போலி முகவர் நிலையம் சுற்றிவளைப்பு

இந்திய பெண்களை மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பும் போலி முகவர் நிலையம் சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2016 | 9:56 am

இந்திய பெண்களை நாட்டிற்கு அழைத்துவந்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாழைத்தோட்டம் பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட வெளிநாட்டு முகவர் நிலையமொன்று நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதில் இருவர் பெண்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

முகவர் நிலையத்திலிருந்து 18 போலி விசா அனுமதிப்பத்திரங்கள், வெளிநாட்டு இறப்பர் முத்திரைகள் நான்கு, போலி கடவுச்சீட்டுகள் உட்பட விமானச்சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 46,34,27, மற்றும் 26 வயதுடைய பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வாழைத்தோட்ட பொலிஸார் இந்த சம்பவம குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்