அவிசாவளையில் மனைவியை கொலை செய்த கணவன் நஞ்சருந்தி உயிரிழப்பு

அவிசாவளையில் மனைவியை கொலை செய்த கணவன் நஞ்சருந்தி உயிரிழப்பு

அவிசாவளையில் மனைவியை கொலை செய்த கணவன் நஞ்சருந்தி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2016 | 11:54 am

அவிசாவளை புவக்பிட்டிய பகுதியில் இன்று அதிகாலை கொலைச்சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

புவக்பிட்டிய பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாடகை வீடொன்றில் வசித்து வந்த தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு வலுவடைந்ததை அடுத்து கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த பின்னர் நஞ்சருந்தி கணவனும் உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இரு குழந்தைகளின் பெற்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், உயிரிழந்த பெண் அவிசாவளையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் 33 மற்றும் 29 வயதடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்