அதிவேகமாக வளர்ந்துவரும் பேஸ்புக் மெஸஞ்சர்: பாவனையாளர் எண்ணிக்கை 80 கோடியைக் கடந்தது

அதிவேகமாக வளர்ந்துவரும் பேஸ்புக் மெஸஞ்சர்: பாவனையாளர் எண்ணிக்கை 80 கோடியைக் கடந்தது

அதிவேகமாக வளர்ந்துவரும் பேஸ்புக் மெஸஞ்சர்: பாவனையாளர் எண்ணிக்கை 80 கோடியைக் கடந்தது

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2016 | 3:59 pm

அதிவேகமாக வளர்ந்து வரும் மொபைல் செயலிகளில், பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக பேஸ்புக் மெஸஞ்சர் இடம்பிடித்துள்ளது.

தற்போது மாதந்தோறும் இந்த செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 80 கோடியைக் கடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் ‘பேஸ்புக்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது. மொபைல், இணையத்தள பயன்பாட்டாளர்களிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ‘பேஸ்புக்’ வளர்ந்து வருகிறது. அதன் மற்றொரு செயலியான (App) பேஸ்புக் மெஸஞ்சரும் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த நவம்பர் இறுதி வரை இதனை 50 கோடி பேர் பயன்படுத்தி வந்த நிலையில், இரண்டே மாதங்களில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை தற்போது 80 கோடியைக் கடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலி குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நீல்சன் நிறுவனம் 13 வயதுக்கு அப்பாற்றப்பட்ட மொபைல் பயன்பாட்டாளர்களிடம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஸ்மார்ட்போன் செயலிகளில் ‘பேஸ்புக்’ கடந்த 2015 ஆம் ஆண்டு மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. மாதம்தோறும் சராசரியாக இந்த செயலியை 12.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டை விட, இது 8 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும். இதேபோல், வீடியோக் காட்சிகளைப் பதிவேற்றுவது முதல் இசை, செயலிகள் டிஜிட்டல் சம்பந்தமான அனைத்து பயன்பாடுகளையும் பகிர்ந்து கொள்வதில் அதிக அளவிலான நுகர்வோரை இந்த ஆண்டு பேஸ்புக் மெஸஞ்சர் ஈர்த்துள்ளது. 2014 ஆம் ஆண்டைக் காட்டிலும், 31 சதவீத வளர்ச்சியைக் கடந்த ஓராண்டில் பேஸ்புக் மெஸஞ்சர் எட்டிப் பிடித்துள்ளது.

பேஸ்புக் மெஸஞ்சருக்கு அடுத்தபடியாக 9.7 கோடி பயன்பாட்டாளர்களைக் கொண்டு, ‘யூ டியூப்’ 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

 

 

நன்றி – தி ஹிந்து


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்