சீன பொருளாதார நெருக்கடி உலக நாடுகளைப் பாதிக்கும் அபாயம்

சீன பொருளாதார நெருக்கடி உலக நாடுகளைப் பாதிக்கும் அபாயம்

சீன பொருளாதார நெருக்கடி உலக நாடுகளைப் பாதிக்கும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2016 | 8:04 am

தற்போது சீனாவில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. இதன்காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தைகள் இந்தவார ஆரம்பத்தில் இருந்தே கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்க பங்குச்சந்தையும் இதனால் பாதிப்புற்றுள்ளதாக பொருளாதார விற்பனர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய நிலை காரணமாக சீனப் பங்குச்சந்தையில் காணப்பட்ட சந்தை தளம்பல் நிலையை கட்டுப்படுத்தும் செயற்றிட்டமும் கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் சீன பங்குச்சந்தை செயற்பாடுகளும் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கபட்டன. இது சீன பங்குச்சந்தை வரலாற்றில் பதியப்பட்ட குறுகிய கால பங்குச்சந்தையாகும்.

இந்த நிலை காரணமாக பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் சரிவை எதிர் நோக்கியுள்ளன.
அண்மைய நாட்களில் டொலருக்கு எதிரான யூரோவினது பெறுமதியும் அதிகரித்திருந்திருந்தது.

சர்வதேச முதலீடுகள் சீனாவில் அதிகளவில் காணப்படாத போதிலும் உலகப் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய நாடாக காணப்படுவதுடன் உலகில் பொருட்கள் மற்றும் சேவைகள் இறக்குமதியில் இரண்டாவது நிலையில் காணப்படுவதனாலும் சீனாவின் பாதிப்பு உலக பொருளாதாரத்தை பெரிதளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யுவானினது பெறுமதியானது மேலும் குறைக்கப்பட்டுள்ளமையினால் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். இந்த பெறுமதி குறைப்பானது உலக நாடுகளின் நாணயங்களிடையே போட்டித்தன்மையை ஏற்படுத்தும் என பொருளியலாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நாணயப் பெறுமதி இறக்கம் சீனாவினது ஏற்றுமதி வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் ஏனெனில் ஏனைய நாடுகளில் சீன உற்பத்திகளை குறைந்த விலையில் பெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

தற்காலத்தில் சீனாவில் நுகர்வோர் தேவை வீதமானது பாரிய சரிவை எதிர்நோக்குகின்றது, இதனால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகமானது 7% இலும் குறைவாகவே காணப்படுகின்றது.

2016 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியில் உலகின் அனைத்து நாடுகளும் பாரிய பின்னடையை எதிர்நோக்கும் என இலங்கையின் நேற்று ஆரம்பமான பொருளாதார மாநாட்டில் அமெரிக்காவின் பிரபல வர்த்தகரான ஸ்கோர்ஸ் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் இலங்கை உட்பட உலகின் ஏனைய வளர்முக நாடுகள் தமது ஏற்றுமதி இறக்குமதி தொடர்பில் அவதானத்துடன் செயற்படவேண்டியது அவசியம்.

சீன பங்குச்சந்தையானது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சரிவினை சந்தித்துள்ளமையான ஸ்கோர்ஸின் இந்த எச்சரிக்கையை மேலும் உறுதி செய்வதாக அமைகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்