கடந்த 9 வாரங்களில் முதன் முறையாக உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை

கடந்த 9 வாரங்களில் முதன் முறையாக உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை

கடந்த 9 வாரங்களில் முதன் முறையாக உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2016 | 10:45 am

கடந்த 9 வாரங்களில் முதன்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1100 டொலர் வரை அதிகரித்துள்ளது. உலக சந்தையில் டொலரின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தின் மதிப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது தற்காலிகமானது எனினும் சீனாவின் பொருளாதார நிலை காரணமாக உலகப் பொருளாதாரமும் பாதிப்புறும் பட்சத்தில் இவ்விலை அதிகரிப்பானது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தங்கமானது முதலீடு செய்வதற்கு ஏற்ற பொருளாக காணப்படுவதால் பல்வேறு தரப்பினரும் இந்த விலை அதிகரிப்பினால் நன்மையடைவார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்