லிபியாவின் பொலிஸ் பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு: சுமார் 50 பேர் பலி

லிபியாவின் பொலிஸ் பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு: சுமார் 50 பேர் பலி

லிபியாவின் பொலிஸ் பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு: சுமார் 50 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 4:25 pm

லிபியாவில் பொலிஸ் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

லிபியாவின் ஸ்லிட்டன் எனும் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிபொருட்கள் தாங்கிய ட்ரக் வாகனம் ஒன்று பொலிஸ் பயிற்சி நிலையத்தினுள் வெடித்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவொரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் எனவும் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பொதுமக்களும் அடங்குவதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மிஸ்ரட்டா நகரின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெடிப்பு இடம்பெற்ற நேரத்தில் சுமார் 350 பேர் வரையில் குறித்த பகுதியில் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் பயிற்சிக்கு இணைந்துகொண்ட இளைஞர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்