ராஜிவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு அவரது தாயார் ​கோரிக்கை

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு அவரது தாயார் ​கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 10:21 pm

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்மை விடுவிக்குமாறு கோரி சிறையிலிருந்து தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் எழுதிய மனுவை தலைமை செயலகத்தில் கையளித்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சட்டப்பிரிவு 161 ஐப் பயன்படுத்தி தன்னை விடுதலை செய்ய மாநில அரசுக்கு உடனடியாக ஆணையிட வேண்டும் என பேரறிவாளன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக அவரது தாயார் கூறியுள்ளார்.

பல வருடங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் தனது மகன் எதிர்வரும் பொங்கல் தினத்திற்கு முன்னர் விடுதலை செய்யப்படுவார் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனின் விடுதலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நடவடிக்கை எடுப்பார் எனவும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்