பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு முன்னாள் தலைவருக்கு அழைப்பாணை

பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு முன்னாள் தலைவருக்கு அழைப்பாணை

பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு முன்னாள் தலைவருக்கு அழைப்பாணை

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 5:50 pm

​பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பில், அவர்களுக்கு ​எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் காரணமாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பத்மினி என். ரணவக்க இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஆணைக்குழுவிற்கு சொந்தமான சுமார் 50 இலட்சம் ரூபாவை முறையற்ற விதத்தில் வேறொரு நிறுவனத்திற்கு வழங்கியதாக நாலக கொடஹேவா உள்ளிட்ட மூவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்