ஊழல் மோசடி விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பு

ஊழல் மோசடி விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பு

ஊழல் மோசடி விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2016 | 12:49 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அறிவிப்பு விடுக்கப்பட்ட தரப்பினருக்காக கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பு அழைப்பு விடுத்ததாக ஆணைக்குழு செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சாட்சியமளிப்பதற்காக மேலும் ஐவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னர் சாட்சியமளித்து வருவதாகவும் ஆணைக்குழு செயலாளர் கூறினார்.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் இதற்கு முன்னரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்