பதினொரு வருடங்களின் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

பதினொரு வருடங்களின் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 8:50 pm

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பை ஏற்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் போஜ் பிரெண்ட் (Børge Brende) ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்தார்.

நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 11 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டை வந்தடைந்த நோர்வே வெளிவிவகார அமைச்சரை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை வரவேற்றார்.

வெளிவிவகார அமைச்சிலுள்ள நினைவுப் பதிவேட்டில் இதன்போது நோர்வே வெளிவிவகார அமைச்சர் தமது கருத்தினை பதிவு செய்தார்.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில துறைகளுக்கு நோர்வேயின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தி இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்