தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா.முத்தரசன்

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 8:12 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையான போதிலும், இந்த விடயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பாராமுகமாக செயற்படுவது கவலையளிப்பதாகவும் இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கூறியுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் தொழிலுக்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலை நீடிப்பது கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இருநாட்டு அரசாங்கங்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்பியூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு நேற்று கடிதம் மூலம் அறிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்