தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2016 | 6:02 am

நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரிவீர தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு நேற்று கடிதம் மூலம் அறிவித்தாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ​கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் .

எல்லை மீறி சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 94 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்