சிறுவர் பாதுகாப்பு செயலணியொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்

சிறுவர் பாதுகாப்பு செயலணியொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 9:34 pm

சிறுவர் பாதுகாப்பு ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.

சிறுவர்களின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சிறுவர்கள் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும் என இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகள், மற்றும் சிறுவர்களின் அபிவிருத்தி தொடர்பில் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

சிறுவர்களின் போஷாக்கு மற்றும் சுகாதாரம் தொடர்பிலும் சிறுவர் விவகாரங்கள் தொடர்பிலான சட்ட மறுசீரமைப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய செயலணியை அறிமுகப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்