சிங்கம் – 3 இற்கான தலைப்பு வௌியானது

சிங்கம் – 3 இற்கான தலைப்பு வௌியானது

சிங்கம் – 3 இற்கான தலைப்பு வௌியானது

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2016 | 12:40 pm

சூர்யா-ஹரி கூட்டணியில் வெளிவந்த ‘சிங்கம்’ படம் பெரிய வெற்றிடைந்ததையடுத்து, அப்படத்தின் தொடர் பாகங்களை எடுக்க சூர்யாவும் ஹரியும் விருப்பப்பட்டனர்.

அந்த வரிசையில் ‘சிங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2’ என்ற பெயரில் வெளிவந்து அதுவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகும் என கூறப்பட்டது. அதன்படி, புதிய தலைப்புடன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்துக்கு ‘எஸ்-3’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

அந்த தலைப்புடன் ஒன்றுக்கும் மேற்பட்ட போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. ஒரு போஸ்டர் சிங்கம் முகமும், சூர்யா முகம் ஒன்றாக இணைந்ததுபோன்று அமைந்துள்ளது. மற்றொரு போஸ்டர் சிங்கம் பின்னணியில் சூர்யா கர்ஜிப்பது போன்றவும் அமைந்துள்ளது.

இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பை விசாகப்பட்டினத்தில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து படப்பிடிப்பை முடித்து இந்த வருடத்தின் இறுதியில் படத்தை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்