‘சட்டி, பானைகள் தொடர்பில் கேட்கின்றனர்; கழிவறையில் உள்ளவற்றைக் கணக்கிடுகின்றனர்’

‘சட்டி, பானைகள் தொடர்பில் கேட்கின்றனர்; கழிவறையில் உள்ளவற்றைக் கணக்கிடுகின்றனர்’

‘சட்டி, பானைகள் தொடர்பில் கேட்கின்றனர்; கழிவறையில் உள்ளவற்றைக் கணக்கிடுகின்றனர்’

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 8:30 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இன்று முற்பகல் தலதா மாளிகைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி பின்னர் அங்குள்ள நான்கு தேவாலயங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாவது;

[quote]தற்போது சமையல் அறையில் உள்ள இலத்திரனியல் உபகரணங்கள், சட்டி பானைகள் தொடர்பில் என்னிடம் கேட்கின்றனர். கழிவறையில் உள்ளவை அனைத்தையும் கணக்கிடுகின்றனர். 2005 ஆண்டிலிருந்து சாப்பிட்டவை, குடித்தவை தொடர்பில் என்னிடம் கேள்விப் பட்டியல் ஒன்றையே தொடுத்துள்ளனர். ஒரு வருடமேனும் இவற்றைத் தேட நேரிடும் என நினைக்கின்றேன்.[/quote]

என்றார்.

ஊடகவியலாளர்: அடுத்த சில தினங்களில் ராஜபக்ஸ ஆட்சியிலிருந்த பிரபலங்கள் சிலர் கைது செய்யப்படவுள்ளனராமே?

மஹிந்த: முடிந்தவரை கைது செய்யலாம். அவர்களின் அரசாங்கம் அல்லவா? நல்லாட்சி!

ஊடகவியலாளர்: உங்களது ஜனாதிபதிப் பதவி இரத்தாகியும் ஒரு வருடமாகின்றது.

மஹிந்த: ஆம்

ஊடகவியலாளர்: இந்த ஒரு வருடகாலத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் முன்னேற்றம் தொடர்பில்…?

மஹிந்த: தற்போது இருக்கும் ஜனாதிபதியிடம் அதனைக் கேட்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். நான் கடந்த 8 ஆம் திகதி தோல்வியடைந்தேன். வெற்றியீட்டிய சிறிசேன அவர்களை 8 ஆம் திகதி வாழ்த்துவேன். நல்லாட்சி தொடர்பில் என்றால் என்னால் திருப்தியடைய முடியாது.

ஊடகவியலாளர்: நீங்கள் பாராளுமன்றத்திற்கு சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குறைவாகவே கதைக்கின்றீர்கள் என சிலர் கூறுகின்றனர்.

மஹிந்த: ஆம் நான் எப்போதும் அவ்வாறே.. மிகவும் குறைவல்லவா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்