English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
07 Jan, 2016 | 10:15 pm
எம்பிலிப்பிட்டிய நகரில் நேற்று முன்தினம் (05) அதிகாலை இடம்பெற்ற மோதலின்போது மேல்மாடியில் இருந்து கீழே வீழ்ந்ததால் கடும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் இன்று உயிரிழந்தார்.
இதனால் பிரதேச மக்கள் இன்று எம்பிலிப்பிட்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
எம்பலிப்பிட்டி நகரம் வரை கண்டனப் பேரணி மேற்கொண்ட மக்கள் எம்பலிப்பிட்டி, கொழும்பு பிரதான வீதியை மறித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இதன்போது எம்பிலிப்பிட்டி நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததுடன் நகரின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு அமைச்சர் தலத்தா அத்துகோறல சென்ற சந்தர்ப்பத்தில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
எம்பிலிப்பிட்டி புதிய நகர வீதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற இரவு விருந்துபசாரத்தின்போது மோதல் இடம்பெற்றிருந்து.
மோதலில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மூன்று பொதுமக்களும் காயமடைந்தனர்.
சம்பவத்தில் இளங்குடும்பஸ்தர் உயிரிழந்தமைக்கு பொலிஸார் பொறுப்புக்கூற வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
ஒரு பிள்ளையின் தந்தையான 29 வயதுடைய சுமித் பிரசன்ன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
அவரது மனைவி நான்கு மாத கர்ப்பிணியெனவும் உறவினர்கள் குறிப்பிட்டனர்.
விருந்து நடைபெற்ற இடத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிகளுக்காக அனுமதிப் பத்திரம் பெறப்படாமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே பொலிஸார் அங்கு சென்றிருந்ததாகவும், விசாரணை முன்னெடுக்காதிருப்பதற்கு அவர்கள் மதுபானம் கோரியதாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.
விருந்திற்காகக் கொண்டுவரப்பட்ட மதுபானம் முடிவடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டதால் பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள பொலிஸார், விருந்து நடைபெற்ற கட்டிடத்தினுள் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் தலையீடு செய்தபோது மோதல் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
இதேவேளை, எம்பிலிப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 21 பேருக்கு இன்று இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
28 May, 2022 | 08:40 PM
28 May, 2022 | 06:10 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS