எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி

எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி

எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2016 | 9:12 am

எண்ணெய் விலைகள் சர்வதேச சந்தையில் 11 ஆண்டுகளில் முதல் முறையாக பீப்பாய்க்கு 35 டொலர்கள் வரை சரிவைக் கண்டுள்ளது.

அதிக உற்பத்தி காரணமாக பாதிப்படைந்த ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 2014 ஆம் ஆண்டின் மத்தியில் நிலவிய அளவைக்காட்டிலும், மூன்றில் ஒரு பங்குக்கும் கீழாகவே இருக்கின்றன. மத்திய கிழக்கில் நிலவும் பெரும் பதற்ற நிலையையும் மீறி விலை வீழ்ச்சி இருக்கிறது.

ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே வெடித்துள்ள சர்ச்சை காரணமாக எண்ணெய் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனால் , வீழ்ந்து வரும் எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கில், பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான ‘ஒபெக்’கின் உறுப்பினர்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க உடன்படுவார்கள் என்ற யூகங்களுக்கு மாறாக, இந்த சர்ச்சை எண்ணெய் விலையை மேலும் குறைத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்