ஊவா மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் இருவர் நியமனம்

ஊவா மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் இருவர் நியமனம்

ஊவா மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் இருவர் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 10:00 pm

ஊவா மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாக முருகன் சச்சிதானந்தன் மற்றும் அனுஷாலிய பிரகதி ஆகியோர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஊவா மாகாண ஆளுனர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக முருகன் சச்சிதானந்தன் மற்றும் அனுஷாலிய பிரகதி ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

எனினும், அவர்கள் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவில்லை.

அந்த வகையில், கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹரின் பெர்னாண்டோ மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோரின் ஊவா மாகாண சபை வெற்றிடங்களுக்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்