இரா. சம்பந்தனின் மிதமான அரசியல் நகர்விற்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பாராட்டு

இரா. சம்பந்தனின் மிதமான அரசியல் நகர்விற்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பாராட்டு

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 9:42 pm

இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்த நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்ட் (Børge Brende) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் மிதமான அரசியல் நகர்விற்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பாராட்டு தெரிவித்ததாக எதிர்கட்சித் தலைவர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிதமான அரசியல் கொள்கைகள் மூலமே மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும் என்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் பிரென்ட் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே சரியான தீர்வை எட்டமுடியும் என எதிர்க்கட்சித் தலைவர் நோர்வே அமைச்சரிடம் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்ததாக எதிர்க்கட்சி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்