ஆசிய கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவராக திலங்க சுமதிபால பொறுப்பேற்றார்

ஆசிய கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவராக திலங்க சுமதிபால பொறுப்பேற்றார்

ஆசிய கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவராக திலங்க சுமதிபால பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 10:26 pm

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரான திலங்க சுமதிபால, ஆசிய கிரிக்கெட் பேரவையின் புதிய தலைவராக இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

துபாயில் இன்று நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போது திலங்க சுமதிபால தலைவராக நியமிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலங்க சுமதிபால 1997 – 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் பொறுப்பை வகித்துள்ளார்.

இந்தப் பொறுப்புக்கு மீண்டும் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டமை தமக்கும், இலங்கைக்கும் கிடைத்த கௌரவம் என திலங்க சுமதிபால தெரிவித்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்