அதிரடி வீரர் ஷேவாக்கின் புதிய விருப்பம்

அதிரடி வீரர் ஷேவாக்கின் புதிய விருப்பம்

அதிரடி வீரர் ஷேவாக்கின் புதிய விருப்பம்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2016 | 6:39 am

கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற விரும்புகிறேன் என்று முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ஷேவாக் கடந்த ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்றார்.

இதனைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் கிரிக்கெட் பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ அல்லது துடுப்பாட்ட பயிற்சியாளராகவோ பணியாற்ற விரும்புவதாக அண்மையில் இணையத்தளமொன்றுக்கு அளித்த பேட்டியில் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.பி.எல். போட்டியில் எந்தவொரு அணியாவது தன்னை ஆலோசகராகவோ அல்லது துடுப்பாட்ட பயிற்சியாளராகவோ நியமிக்க விரும்பினால் அந்த பணியை ஏற்று செயல்பட தான் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும் எண்ணம் எதுவும் இல்லை எனவும் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

“என்னுடைய ஆட்டம் பற்றி மற்றவர்களை விட எனக்கு அதிகம் தெரியும். நான் வளர்ச்சி அடைந்து வந்த கால கட்டத்தில் நிறைய போட்டிகளில் நடுகள வீரராக களம் கண்டேன். அப்போது குறைந்த பந்துகளையே எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அதில் அதிகபட்சம் எவ்வளவு ஓட்டங்களை எடுக்க முடியுமோ? அவ்வளவு ஓட்டங்கள் எடுப்பேன். இதே அணுகுமுறையை தான் உள்நாட்டு கிரிக்கெட்டிலும், பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலும் கடைப்பிடித்தேன். இந்திய அணியில் சேர்ந்த போது டெண்டுல்கர் போல் விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் ஒரு டெண்டுல்கர் தான் இருக்க முடியும் என்பதை உணர்ந்த பிறகு எனது துடுப்பாட்ட பாணியை மாற்றினேன்” என ஷேவாக் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்