வர்த்தக உடன்படிக்கையில் முதலீடுகள், சேவைத்துறைகளை உள்ளடக்க இலங்கை – பாகிஸ்தான் இணக்கம்

வர்த்தக உடன்படிக்கையில் முதலீடுகள், சேவைத்துறைகளை உள்ளடக்க இலங்கை – பாகிஸ்தான் இணக்கம்

எழுத்தாளர் Bella Dalima

06 Jan, 2016 | 9:05 pm

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று (05) கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டார்.

வர்த்தகத் தொடர்புகளின் எதிர்காலத் திட்டமிடல் குறித்து இந்த கருத்தரங்கு இடம்பெற்றது.

இதன்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பின்வருமாறு குறிப்பிட்டார்;

[quote]இலங்கை – பாகிஸ்தான் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் முதலீடுகள் மற்றும் சேவைத்துறைகளை உள்ளடக்குவதற்கு இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. இதன்மூலம் எமது இரு நாடுகளினதும் நிறுவனங்கள் கூட்டாக வர்த்தகங்களை ஆரம்பித்து, மூன்றாம் உலக நாடொன்றிற்கு ஏற்றுமதிகளை முன்னெடுக்க முடியும். எமது இரண்டு நாடுகளுக்கும் இடையில் மூலோபாய ரீதியில் முக்கிய கேந்திர நிலையமாக மாற்றமடையும் வகையிலான பரிணாமத்தை எட்டுவதற்காக சேவைகள் துறைக்கும் பாரிய பிரவேசம் கிட்டும். இதனை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. இந்த இலக்கினை நிதர்சனமாக மாற்றிக்கொள்ளும் பொருட்டு இரண்டு நாடுகளுக்குமிடையில் வர்த்தக பிரதிநிதிகளை பரிமாற்றிக்கொள்வதுடன், வர்த்தகக் கண்காட்சிகளையும் நடத்தத் தீர்மானமிக்க பொறுப்பினை இதனூடாக நிறைவேற்ற முடியும். அதேபோன்று, ஒன்றிணைந்த முதலீட்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்கவும், இலங்கையுடன் பொதுவான நாணய அலகொன்றைப் பயன்படுத்துவதற்குமான சாத்தியம் குறித்து நாம் ஆராயவுள்ளோம்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்