சிங்கராஜ வனப்பகுதியில் இடம்பெறும் காடழிப்பை நிறுத்துவதற்கு நடவடிக்கை

சிங்கராஜ வனப்பகுதியில் இடம்பெறும் காடழிப்பை நிறுத்துவதற்கு நடவடிக்கை

சிங்கராஜ வனப்பகுதியில் இடம்பெறும் காடழிப்பை நிறுத்துவதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

06 Jan, 2016 | 7:37 am

சிங்கராஜா வன எல்லையில் அமைந்துள்ள தமது ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியில் இடம் பெறும் சூழலுக்கு பாதகமான விடயங்களை நிறுத்துவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் சுமன திஸ்ஸ தாம்புகல தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு ஆணைக்குழுவின் இரத்தினபுரி மாவட்ட பணிப்பாளர் பத்மசிறி லியனகேவை நியமித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி மாவட்ட பணிப்பாளர் நேற்றையை தினம் குறித்த இடத்திற்கு சென்று காடழிவு ஏற்பட்டுள்ள இடத்தினை கண்கானித்ததாக சுமன திஸ்ஸ தாம்புகல சுட்டிக்காட்டியுள்ளார்.

போவிட்டியாவத்த, ஹந்தபான்எல்ல. மாணிக்கவத்த உள்ளிட்ட சில பகுதிகளில் அண்மைக்காலமாக பாரியளவில் காடழிப்பு இடம்பெற்று வருவதை கடந்த சில தினங்களாக நாம் ஆதாரங்களுடன் அறிக்கையிட்டிருந்தோம்.

சிங்கராஜ வன எல்லைப்பகுதிகள் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் காணிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, காணிகள் தமக்கு உரித்தானது என சிலர் உரிமைகோரி வருகின்ற நிலையில் அது தொடர்பிலான ஆவணங்கள் ஏதுவும் குறித்த நபர்களிடம் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் சுமன திஸ்ஸ தாம்புகல கூறியுள்ளார்.

குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ள காடழிப்பு தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யுமாறு ஆலாசனை வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்