வாழைச்சேனையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் ஜனாசா நல்லடக்கம்

வாழைச்சேனையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் ஜனாசா நல்லடக்கம்

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2016 | 10:22 pm

மட்டக்களப்பு – வாழைச்சேனை, மாஞ்சோலை பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் ஜனாசா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, அபிவிருத்தி என்ற போர்வையில் அமைக்கப்பட்ட கேணியில் பாதுகாப்பு இன்மையினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.

மாஞ்சோலை பதுரியாநகர் சிறுவர் பூங்காவிற்கு அருகில் காணப்படும் கேணியில் வீழ்ந்த சிறுவனை மற்றுமொரு சிறுவன் காப்பாற்ற முயன்ற சந்தர்ப்பத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மீராவோடை மற்றும் மாவடிச்சேனை பகுதிகளைச் சேர்ந்த 13 மற்றும் 15 வயதான இரு சிறுவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு சிறுவர்களும் இரு சகோதரிகளின் புதல்வர்கள் என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்