வாழைச்சேனையில் தண்ணீர் குழியொன்றினுள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு

வாழைச்சேனையில் தண்ணீர் குழியொன்றினுள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு

வாழைச்சேனையில் தண்ணீர் குழியொன்றினுள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2016 | 8:04 am

வாழைச்சேனை மாஞ்சோலை பிரேதசத்தில் தண்ணீர் குழியொன்றினுள் வீழ்ந்து 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 7.45 அளவில் மாஞ்சோலை பிரதேசத்தில் சிறுவர் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள
தண்ணீர் பூங்காவிற்குள் இறங்க முற்பட்ட போது குறித்த சிறுவர்கள் இருவரும் மூழ்கியுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது .

கவலைக்கிடமான நிலையில் இருந்த சிறுவர்க்ள இருவரையும் வைத்திசாலையில் அனுமதித்ததன்
பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீராவோடை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனும் மாவடிச் சேனை பகுதியை சேர்ந்த 15
வயது சிறுவன் ஒருவனுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரின் சடலங்களும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்