வடக்கு கடற்பரப்பில்  இந்திய மீனவர்கள் 7 பேர் கைது

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 7 பேர் கைது

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 7 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2016 | 9:14 am

வடக்கு கடற்பரப்பில் நேற்று (04) இரவு 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது .

யாழ் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களும் அவர்களுது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் ரமேஸ் கண்ணா தெரிவித்துள்ளார் .

இதே வேளை தலை மன்னார் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்களும் வெர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத் தெரிவித்துள்ளது .

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட அவர்களின் படகுகளையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்றைய தினம் முல்லைத் தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களும் அவர்களின் ரேலார் படகு ஒன்றும் மீனவர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மீனவர்களும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் .

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்