ராஜிவ் கொலை வழக்கு:   எழுவரையும் விடுவிக்க இதுவே சிறந்த தருணம் – தமிழர் எழுவர் கூட்டமைப்பு

ராஜிவ் கொலை வழக்கு:  எழுவரையும் விடுவிக்க இதுவே சிறந்த தருணம் – தமிழர் எழுவர் கூட்டமைப்பு

ராஜிவ் கொலை வழக்கு:  எழுவரையும் விடுவிக்க இதுவே சிறந்த தருணம் – தமிழர் எழுவர் கூட்டமைப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2016 | 7:19 pm

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவின் தமிழர் எழுவர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தமிழர் எழுவர் கூட்டமைப்பினர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக குறித்த 7 பேரும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த எழுவரையும் விடுவிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னர் தீர்ப்பளித்திருந்ததையும் தமிழர் எழுவர் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக சிலர் தவறாக அர்த்தம் கற்பிப்பதாக இதன் போது எழுவர் கூட்டமைப்பு தெரிவித்தாக த ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்திய அரசியல் யாப்பின் 161 ஆவது சட்ட விதியின் பிரகாரம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 பேரையும் விடுதலை செய்ய இதுவே சிறந்த தருணம் எனவும் இது தொடர்பில் தமிழக முதலமைச்சரிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளதாகவும் தமிழர் எழுவர் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்