நிவாரண விலையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட உரத்தை பழைய விலைக்கு வழங்கத் தீர்மானம்

நிவாரண விலையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட உரத்தை பழைய விலைக்கு வழங்கத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2016 | 10:32 pm

நிவாரண விலையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட உரத்தை 1200 ரூபா முதல் 1300 ரூபா வரையான பழைய விலைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

நிதி அமைச்சுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கத்தின் நிவாரணத் திட்டத்தின்கீழ் இறக்குமதி செய்யப்பட்டு கையிருப்பில் உள்ள உரத்தை தற்போதைய சந்தை விலைக்கு அமைய விற்பனை செய்வதற்கான உரிமை எவருக்கும் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விவசாய அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் துமிந்த திசாநாயக்க இவற்றைக் குறிப்பிட்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்