நாடளாவிய ரீதியில் மீன் விலை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் மீன் விலை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் மீன் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2016 | 11:52 am

நாடு பூராகவும் மீன்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

சந்தைக்கு கிடைக்கும் மீன்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தைக் கட்டடத் தொகுதியின் முகாமையாளர் பந்துல சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமையே மீன்களின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாய் அமைந்துள்ளது.

எவ்வாறாயினும் இறால்களின் விலை பெருமளவு குறைவடைந்துள்ளதாகவும் முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்