துருக்கி ஏஜியன் கடற்பகுதியில் படகு விபத்து: குழந்தைகள் மூவர் அடங்கலாக 21 பேர் பலி

துருக்கி ஏஜியன் கடற்பகுதியில் படகு விபத்து: குழந்தைகள் மூவர் அடங்கலாக 21 பேர் பலி

துருக்கி ஏஜியன் கடற்பகுதியில் படகு விபத்து: குழந்தைகள் மூவர் அடங்கலாக 21 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2016 | 5:12 pm

துருக்கியின் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் 3 குழந்தைகள் அடங்கலாக 21 பேரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலியான 11 பேரின் சடலங்கள் அய்வாலிக் பகுதியில் கரையொதுங்கியுள்ளதுடன் மேலும் 10 சடலங்கள் டிக்கிலி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் இதுவரை எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் எந்நாட்டவர் எனும் தகவல் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், இவர்கள் அய்வாலிக் பகுதியிலிருந்து கிரீக் நோக்கி பயணித்திருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திங்களன்று டிங்கி படகு பாறையில் மோதி விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த 2 வயது சிறுவனின் உடல் கரையொதுங்கியிருந்தது.

2016 ஆம் ஆண்டில் புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்கொண்ட முதலாவது உயிரிழப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் படகிலிருந்து 39 பேர் மீட்கப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்