வேடிக்கையான பேச்சினால் சர்ச்சையில் சிக்கிய கிறிஸ் கெய்ல் (Video)

வேடிக்கையான பேச்சினால் சர்ச்சையில் சிக்கிய கிறிஸ் கெய்ல் (Video)

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2016 | 10:24 am

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்-பாஸ் 20 ஓவர் போட்டியின் போது, தன்னிடம் பேட்டி எடுத்த பெண் தொகுப்பாளரை மது அருந்த அழைத்துள்ளார் மேற்கு இந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்-பாஸ் 20 ஓவர் போட்டியில், மெல்போர்ன் அணிக்காக விளையாடி வருகிறார் மேற்கு இந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்டக்காரர் கிறிஸ் கெயில்.

இன்று டாஸ்மேனியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 15 பந்துகளில் 41 ரன்களை விளாசினார் கெய்ல். கெய்ல் ஆட்டமிழந்த பிறகு, பெண் தொகுப்பாளர் நெல் மெக்லாப்லின் அவரிடம் பேட்டி எடுத்தார்.

தன்னை பேட்டி எடுத்த பெண் தொகுப்பாளரிடம் மது அருந்துவதற்கு வருவீர்களா என அழைத்ததுடன், அவரது கண்களைப் பார்ப்பதற்காகவே பேட்டியில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் வெட்கப்படாதீர்கள் என கெய்ல் கிண்டலடித்தார்.

கெய்லது இத்தகைய பேச்சினால் தர்மசங்கட நிலைக்குள்ளான அந்த தொகுப்பாளர் சுதாகரித்துக் கொண்டு பேட்டியை நிறைவு செய்தார்.

எனினும் கெய்லின் இத்தகைய நடவடிக்கை குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தினால் மாத்திரமல்லாது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையையும் அவர் மீது கண்டனத்தையும் உண்டாக்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் பலர் கெயிலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுவாக கெய்ல் இதுபோன்று கேளிக்கையாக பேசுவது இயல்பு.

இதுபோன்று கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கரிபியன் பிரீமியர் லீக் தொடரின்போது பெண் நிருபர் ஒருவர், கெயிலின் ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் அடுத்த போட்டியில் வீரர்களின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதலளித்த கெய்ல், நல்லது, நான் இதுவரை உங்களைத் தொட்டதில்லை. ஆகவே, எப்படி இருக்கும் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை என்று கிண்டலாகக் கூறி சர்ச்சையில் சிக்கி கொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்