கொழும்பின் பெரும்பாலான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பின் பெரும்பாலான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பின் பெரும்பாலான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2016 | 7:56 am

பாகிஸ்தான் பிரதமர் நவாங் ஷெரீப்பின் விஜயத்தால் இன்று கொழும்பின் பெரும்பலான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் பல்வேறு சந்தரப்பங்களில் குறித்த போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

இதனடிப்படையில் இன்று காலை 8.30 மணியிலிருந்து காலை 10 மணி வரை பாடசாலை வீதி ,ரீகல் சுற்று வட்டம் ,வங்கி மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தையிலிருந்து காலி மத்திய வீதி வரையிலும் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 12.30 வரை என்.எஸ்.ஏ சுற்று வட்டத்திலிருந்து காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி வரையிலும் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

பிற்பகல் 1.30 மணியிலிருந்து 2.00 மணி வரை கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி வீதியின் என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் ,லோட்டஸ் வீதி ,செரமிக் சந்தி, ரீகல் சுற்றுவட்டம் ,பாடசாலை வீதியிலிருந்து கொம்பெனித் தெரு பொலிஸ் நிலையத்தின் முன் உள்ள சுற்றுவட்டம் வரையும் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்