ஈரானுடனான உறவை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பஹ்ரேன், சூடான், ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானம்

ஈரானுடனான உறவை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பஹ்ரேன், சூடான், ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானம்

ஈரானுடனான உறவை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பஹ்ரேன், சூடான், ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2016 | 9:28 am

ஈரானுடனான உறவுகளை முடிவிற்குக கொண்டுவருவதற்கு சவூதியின் பங்காளி நாடுகளான பஹ்ரேன், சூடான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன தீர்மானித்துள்ளன.

சவூதி அரேபியாவில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 47 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்களால் ஈரானிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்திருந்தது.

அத்துடன், சவூதி அரேபியாவிலுள்ள ஈரானிய இராஜதந்திரிகளை 48 மணித்தியாலங்களில் வெளியேறுமாறும் சவூதி அரேபியா எச்சரித்தது.

அத்துடன், ஆயுத கடத்தலின் ஊடாக அல் – கைதா இயக்கத்தை ஈரான் பாதுகாப்பதாகவும் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக சவூதியின் பங்காளி நாடுகளான சூடான் மற்றும் அரபு இராச்சியம் தெரிவித்திருந்தன.

நேற்றைய தினம் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக பஹ்ரேனும் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றைய தினம் கூடிய பஹ்ரேன் அமைச்சரவை இந்த முடிவை எட்டியுள்ளதுடன் தெஹ்ரானில் அமையப் பெற்றுள்ள சவூதி தூதரகம் மீது 2 பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவையில் எதிர்ப்பும் வெளியிடப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்