இலங்கையுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

இலங்கையுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

இலங்கையுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2016 | 1:29 pm

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3 – 1 என்ற ரீதியில் நியூசிலாந்து அணி கைப்பாற்றியுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இல்ஙகை அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்தது .

இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 294 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்டின் கப்டில் 10 ஆவது சர்வதேச சதத்தினை பூர்த்தி செய்து 102 ஓட்டங்களை பெற்றார்.

கேன் வில்லியம்ஸன் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோர் தலா 61 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் நுவன் குலசேகர 3 விக்கெட்களை வீழத்தினார்.

295 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மத்தியூஸ் 95 ஓட்டங்களை பெற்றதுடன் தினேஸ் சந்திமால் 50 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் ஹெனக்றி 5 விக்கெட்டுக்களையும் டிரன்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களையும் வீழத்தினர்.

இதன் அடிப்படையில் 36 ஓட்டங்களினால் நியூசிலாந்து போட்டியில் வெற்றியீட்டியது.

போட்டி நாயகனாக நியூசிலா்நது வீர்ர் ஹென்றி தெரிவானார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்