இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய மீனவ பேரவை தலைவர்

இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய மீனவ பேரவை தலைவர்

இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய மீனவ பேரவை தலைவர்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2016 | 12:24 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 94 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எதிர்வரும் தை பொங்களுக்கு முன்னர் விடுவிக்க மத்தியரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மீனவ பேரவை தலைவர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

கடந்த இந்திய மத்தியரசு, இரு தரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தைகளுக்கு மூன்று முறை சந்தர்பங்கள் ஏற்படுத்திய போதும் இந்த அரசு அதற்கான எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என இந்திய மீனவ பேரவை தலைவர் குற்றம் சுமத்தியுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே இந்திய மத்தியரசு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இரு தரப்பு மீனவர்களின் 4 ஆம் கட்ட பேச்சுவார்த்ததைக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த மீனவர் பிரச்சினை குறித்து மத்தியரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே மாநில மற்றும் மாவட்ட மீனவ அமைப்புகள் தமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய மீனவ பேரவை தலைவர் குறிப்பிட்டுள்ளார் .

கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 40 கோடி பெறுமதியான 71 படகுகள் பயன்படுத்தபடாத நிலையில் உள்ளதால் சேதமடைந்து வருவதாக த ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்களின் விடுதலை குறித்த மத்தியரசு அக்கரை இன்றி செயற்படுவது மீனவர்களை சீற்றத்திற்குள்ளாக்கியுள்ளதாகவும் இந்திய மீனவ பேரவை தலைவர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்