அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்றும் ஆஜர்

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்றும் ஆஜர்

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்றும் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2016 | 12:36 pm

பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதிக்கு இன்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கே அவரை அழைத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா கூறினார்

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி இது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்றைய தினமும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நேற்று மாலை 6 மணி வரை அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக லெசில் டி சில்வா குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்