வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 8:14 am

இரட்டைக் குழந்தைகள் என்றாலே அனைத்தும் ஒரே போல்தான் இருக்கும். இப்படி இருக்கும் போது பிறந்த வருடம் மட்டும் எப்படி வேறு வேறாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பே.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெ்பொருவருக்கு வியாழக்கிழமை இரவு ஜெலின் என்ற பெண் குழந்தை முதலில் பிறந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஜெலினின் தம்பியான லூயிஸ் பிறந்தான்.

ஆனால் அழுது கொண்டிருந்த தன் குழந்தைகளைக் கவனிக்காமல் அவரது அப்பாவான லூயிஸ் மருத்துவமனையில் இருந்த கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் அரிதினும் அரிதான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம்தான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நொடியில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் புத்தாண்டு தினத்தின் கடைசி நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஜெலின் பிறந்தாள். அடுத்து லூயிஸ் பிறப்பதற்குள் கடிகார முள் 12-ஐத் தாண்டிவிட்டது.

எனவே, ஜெலின் பிறந்த ஆண்டு 2015, ஆனால் லூயிஸ் பிறந்த ஆண்டோ 2016


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்