விரைவில் கியூபா பயணமாகின்றார் ஒபாமா

விரைவில் கியூபா பயணமாகின்றார் ஒபாமா

விரைவில் கியூபா பயணமாகின்றார் ஒபாமா

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 8:08 am

அமெரிக்கா, கியூபா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே அரை நூற்றாண்டு காலமாக பகைமை நிலவி வந்தது. இப்போது அவ்விரு நாடுகள் பகைமைக்கு விடை கொடுத்துவிட்டு உறவுக்கு நட்புக்கரம் நீட்டி உள்ளன. தூதரக உறவும் மலர்ந்துள்ளது.

இந்த உறவினை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபாவுக்கு செல்லவுள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் ஹவாயில் நிருபர்களிடம் கூறுகையில், “கியூபாவுடனான உறவை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஒபாமா, அங்கு செல்லவுள்ளார். அவர் எப்போது செல்வார் என்பதை வெள்ளை மாளிகை அடுத்த 2 மாதத்தில் முடிவு செய்யும்” என தெரிவித்தார்.

ஒபாமா, கியூபா செல்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக அமையும் என சர்வதேச ரீதியாக எதிர்பார்க்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்