வரலாறு படைத்த பென் ஸ்டோக்ஸ்

வரலாறு படைத்த பென் ஸ்டோக்ஸ்

வரலாறு படைத்த பென் ஸ்டோக்ஸ்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 7:59 am

தென்ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கேப்டவுனில் கடந்த சனிக்கிழமை (2) ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 87 ஓவருக்கு 5 விக்கெட்களை இழந்து 317 ஓட்டங்களை பெற்றிருந்தது. பென் ஸ்டோக்ஸ் 74 ஓட்டங்களுடனும், பேர்ஸ்டோவ் 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது பென் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 629 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது.

இதன் சிறப்பம்சம் பென் ஸ்டோக்ஸ் விளாசிய 258 ஓட்டங்களாகும். இந்த 258 ஓட்டங்களின் மூலம் பல்வேறு சாதனைகளை ஸ்டோக்ஸ் பதிவு செய்தார். அவை பின்வருமாறு :

163 பந்துகளில் இவர் பெற்றுக்கொண்ட இரட்டைச் சதமானது இரண்டாவது அதிவேக இரட்டைச்சதமாகும். இதற்கு முன்னர் சேவாக் வசமே இந்த சாதனை காணப்பட்டது. சேவாக் இலங்கை அணிக்கெதிராக 168 பந்துகளில் 200 ஓட்டங்களைக் கடந்திருந்தார்.

பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோருக்கிடையில் 6 ஆவது விக்கெட்டுக்காக பகிரப்பட்ட 399 ஓட்டங்கள் இங்கிலாந்து அணி சார்பாக பெறப்பட்ட எந்தவொரு விக்கெட்டுக்குமான இரண்டாவது அதிகூடிய ஓட்டமாகும். 1957 ஆம் ஆண்டில் கௌட்ரி மற்றும் மேய் ஆகியோருக்கிடையில்  பகிரப்பட்ட 411 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாக காணப்படுகின்றது.

ஸ்டோக்ஸ் இதன்போது 11 ஆறு ஓட்டங்களை விளாசினார். இது ஒரு இனிங்ஸில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஆறு ஓட்டங்களாகும். வசீம் அக்ரம் விளாசிய 12 ஆறு ஓட்டங்களே அதிகூடிய எண்ணிக்கையாகும்

இங்கிலாந்தின் ஆறாம் நிலை வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.

அத்துடன் இங்கிலாந்துக்கான அதிவேக 100,150,200 மற்றும் 250 ஓட்டங்களுக்கான சாதனையையும் இவரால் படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்