பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கை வந்தடைந்தார்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கை வந்தடைந்தார்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 4:06 pm

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

நாட்டை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கட்டுநாயக்க சர்வதேச விமான
நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமரசிங்க வரவேற்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்புக்கு ஏற்ப நாட்டை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (05) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சிலரை சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

சுகாதாரம்,விஞ்ஞானம் மற்றும்தொழில்நுட்பம்,வர்த்தகம்,புள்ளிவிபரவியல்,மாணிக்ககல் மற்றும் தங்காபரணங்கள்,நிதி மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குதல், கலாசாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்