நியூஸ்பெஸ்ட்டின் செய்தி அறிக்கையிடலை அடுத்து சிங்கராஜவன காடழிப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் அதிகாரிகள்

நியூஸ்பெஸ்ட்டின் செய்தி அறிக்கையிடலை அடுத்து சிங்கராஜவன காடழிப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் அதிகாரிகள்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 7:51 pm

சிங்கராஜ வனப்பகுதியின் எல்லைப் பகுதியில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் நியூஸ்பஸெ்ட் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறது.

போவிடியாவத்த, ஹந்தபான்எல்ல, மானிக்கவத்த உள்ளிட்ட சில பகுதிகளில் பெறுமதியான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய பல மரங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

சில மரங்களை சுற்றி டயர் எரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலக மரபுரிமையாக கருதப்படும் சிங்கராஜ வனப்பகுதியில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் அதிகாரிகள் அறிந்திருக்காமை தொடர்பில் அங்கு விஜயம் மேற்கொண்ட நியூஸ்பெஸ்ட் குழுவினரால் அறிந்து கொள்ள முடிந்தது.

எனினும் நியூஸ்பெஸ்ட் நேற்று செய்தி வெளியிட்ட பின்னர் நிலமை தொடர்பில் ஆராய்ந்ததாக கலவான பிரதேச செயலாளர் உதய குமாரி தெரிவித்தார்.

கிராம சேவை உத்தியோத்தர் தனக்கு அறிவித்தாலும், அது தனியார் காணி என்றே கூறியிருந்தாகவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான ஒரு பகுதி என்பதுடன் இதன் உரிமையை உறுதிப்படுத்தவதற்காக வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடயத்தை இது குறித்து நாம் ஆராய்ந்த போது அறிந்து கொள்ள முடிந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்