நாட்டின் வனப்பகுதியை அடுத்த 3 வருடங்களில் 32 வீதமாக அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் வனப்பகுதியை அடுத்த 3 வருடங்களில் 32 வீதமாக அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 7:04 pm

29 வீதமாக காணப்படும் நாட்டின் வனப்பகுதியை அடுத்த மூன்று வருடங்களில் 32 வீதமாக அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, அபேகம வளாகத்தில் நடைபெற்ற வனப்பாதுகாப்பு உதவி அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து…

[quote]வில்பத்து வனப்பகுதியில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கவனம் செலுத்தியிருந்தனர். 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் அமைச்சுக்களின் குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக வனபாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 3500 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி வட பகுதியில் விடுவிக்கப்பட்டது.[/quote]

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜனாதிபதி செயலகத்தில், உத்தியோத்தர்களுக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்து கடமைகளை ஆரம்பித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்