நடராஜா ரவிராஜ் கொ​லை: சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சி விசாரணை இன்று ஆரம்பம்

நடராஜா ரவிராஜ் கொ​லை: சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சி விசாரணை இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 7:44 pm

யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சி விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது முதலாவது சாட்சியாளரான பொலிஸ் கான்ஸ்டபிள் சம்பத் பிரித்திவிராஜ் என்பவர் கடந்த வருடம் பெப்ரவரி 26 மற்றும் மார்ச் 20 ,23 ஆம் திகதிகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் அளித்த வாக்குமூலங்கள் சாட்சியங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்தப் படுகொலை கடற்படை புலானாய்வுப் பிரிவின் வழி நடத்தலின் பேரில் இடம்பெற்றதாக அந்த சாட்சியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு கங்காராம வீதியின் லொன்டரி தோட்டம் பகுதியில் இயங்கியதாகவும் சாட்சியாளர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி நாரஹேன்பிட்டிய பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்