தொழில் அமைச்சுக்குரித்தான 31 சட்டங்களை மீள்திருத்த நடவடிக்கை

தொழில் அமைச்சுக்குரித்தான 31 சட்டங்களை மீள்திருத்த நடவடிக்கை

தொழில் அமைச்சுக்குரித்தான 31 சட்டங்களை மீள்திருத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 9:18 am

தொழில் அமைச்சுக்குரித்தான 31 சட்டங்களை மீள்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டங்களை தற்காலத்திற்கு பொருந்தும் வகையில் மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டப்ளீயூ.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் தொழிற் சட்டங்கள் 1923 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதென குறிப்பிட்டுள்ள அமைச்சர், அவற்றில் சில தற்காலத்தின் பொருளாதார நிலைமைகளை சீர் செய்யும் வகையில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில சட்டங்கள் வலுவற்றதாக காணப்படுவதாகவும் தொழில் அமைச்சர் கூறியுள்ளார்.

இவற்றின் அடிப்படையிலையே குறித்த சட்டங்களை மீள் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டப்ளீயூ.டீ.ஜே. செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்