தனது சொந்த பணிகளுக்கு உதவியாக ரோபோ உருவாக்கும் மார்க் சக்கபேர்க்

தனது சொந்த பணிகளுக்கு உதவியாக ரோபோ உருவாக்கும் மார்க் சக்கபேர்க்

தனது சொந்த பணிகளுக்கு உதவியாக ரோபோ உருவாக்கும் மார்க் சக்கபேர்க்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 5:29 pm

பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க் தனது தனிப்பட்ட மற்றும் அலுவலக உதவிக்காக எளிமையான ரோபோவை தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள மார்க் சக்கபேர்க், “இந்த ஆண்டு என் முன் இருக்கும் மிகப் பெரிய சவால், எனக்கான ஓர் எளிமையான ரோபோவை தயாரிப்பதுதான். அயன் மேன் படத்தில் வரும் ஜார்சிஸ் என்ற பட்லர் ரோபோவைப் போல அமைய வேண்டும்.

எனது தேவைக்காக நான் உருவாக்கப் போகும் இந்த ரோபோ மிகவும் வேடிக்கையாகவும் சவாலாகவும் இருக்கப் போகிறது. உதாரணமாக, எனது நண்பர்களின் முகங்களை அதற்கு சொல்லிக் கொடுத்து, வீட்டில் அழைப்பு மணி அடித்தால் அவர்களை வரவேற்கும் வகையில் வடிவமைப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டின் முடிவில், சக்கபேர்க் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில், தனது 99% பங்குகளை விற்று செய்திகளில் தவறாது இடம்பிடித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்