எதிர்க்கட்சித் தலைவர், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேயரிடையே சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேயரிடையே சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 8:51 pm

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி ப்ளேயர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமருக்கு இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தியு்ளள்தாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் அசாதாரணமான இராணுவப் பிரசன்னம்,காணிப்பிரச்சினை,காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்களை எதிர்க்கட்சித்தலைவர் டொனி ப்ளேயருக்கு எடுத்துரைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் வடக்கு கிழக்கில் காத்திரமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் அவசியம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் வலுப்படுப்படுத்தப்பட வேண்டியதன் தேவை குறித்தும் இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறலானது உண்மை மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்டதாக அமையவேண்டும் என ஐ.நா தீர்மானம் குறித்து தெளிவுபடுத்தும் போது எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நியாயமானதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் நடைமுறை சாத்தியமானதுமான அரசியல் தீர்வொன்று எட்டப்படுவதன் அவசியம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டொனி ப்ளேயருக்கு தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்