ஈரான் உடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கின்றது சவுதி

ஈரான் உடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கின்றது சவுதி

ஈரான் உடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கின்றது சவுதி

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 6:40 am

ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வதாக சவுதியின் வெளிவுறவு அமைச்சர் அடெல் அல் ஜூபெயிர் அறிவித்துள்ளார்.

முன்னதாக சவுதி அரேபியாவில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த, ஷியா பிரிவு மதகுரு உட்பட, 47 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது ஆர்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சவுதி தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வதாக சவுதியின் வெளிவுறவு மந்திரி அடெல் அல் ஜூபெயிர் தெரிவித்துள்ளார். மேலும் சவுதியில் இருக்கும் ஈரான் தூதரக அதிகாரிகள் அடுத்த 48 மணிநேரத்தில் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷியா பிரிவு தலைவர் உட்பட 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி அரேபியா அரசின் நடவடிக்கைக்கு ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரெளஹானி கடும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்