இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுவிக்குமாறு கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுவிக்குமாறு கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 7:14 pm

இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு – கேப்பாபுலவு பிரதேச மக்களினால் இந்த கவனயீரப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது பூர்விக நிலங்களை வழங்கவும் ,மாதிரி கிராமம் வேண்டாம் தமது நிலங்களே வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ். கஜேந்தின் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்