இன்றும் நாளையும் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

இன்றும் நாளையும் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

இன்றும் நாளையும் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 12:50 pm

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று மாலை நான்கு மணி தொடக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதி, பண்டாரநாயக்க சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்தை , இந்திரம் சந்தி, சங்கராஜா சுற்றுவட்டம், பு்சிகாவத்தை, மருதானை சந்தி, டாலி வீதி, காமினி க்ஷீதி, ரீகல் சந்தி ஊடகாய கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்திற்கருகிலுள்ள சுற்று வட்டம் வரை இன்று மாலை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

மேலும் நாளை காலை ஆறு மணி தொடக்கம் பிற்பகல் இரண்டு மணி வரை இடைகிடையே வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய காலை ஆறு மணி தொடக்கம் பத்து மணி வரை ரீகல் சுற்றுவட்டம், வங்கி வீதி,
ஜனாதிபதி வீதி ஊடாக காலு வீதி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தபடவுள்ளது.

மேலும் முற்பகல் 11 மணிமுதல் 12 முப்பது வரை என்.எஸ்.ஏ சுற்றுவட்டத்தினூடாக கொள்ளுபிட்டி சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை பிற்பகல் ஒன்று முப்பது தொடக்கம் இரண்டு மணிவரை கொள்ளுபிட்டி சந்தியிலிருந்து என்.எஸ்.ஏ சுற்றுவட்டத்தினூடாக லோட்டஸ் வீதி, ரீகல் சந்தி, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டம் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்