அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 12:58 pm

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாபதி பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கே அவர் ஆஜராகியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே வட மத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயளர்களுக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை பெற்றுக் கொடுக்கப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பில் பிரதேச அரசியல்வாதியுடன் அதிகாரிகள் சிலரும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயளலாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்